என் மலர்
நீங்கள் தேடியது "abdul vahab mla"
- நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார்.
நெல்லை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர்கள் தர்மன், எஸ்.வி.சுரேஷ், மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், மாநகர துணைச்செயலாளர்கள் சுதா மூர்த்தி, பிரபு, கவுன்சிலர்கள் உலகநாதன், கந்தன், பவுல்ராஜ், கோகுலவாணி, இந்திரா சுண்ணாம்பு மணி, பேச்சியம்மாள், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், பொறியாளர் அணி சாய், நிர்வாகிகள் முகமது அலி, புவனேஷ்வரி, வசந்தி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி பலராமன், காசிமணி, மாநகர வர்த்தக அணி எல்.ஐ.சி.பேச்சிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புதிதாக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மேயர் சரவணன், தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சுபாஷினி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செல்லப் பாண்டியன்,
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் லட்சுமண குமார், சரக மேற்பார்வையாளர் காதர் மைதீன், 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, வார்டு உறுப்பினர்கள் முருகன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






