என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்தி கோவை நியூஸ்"

    பல்வேறு நாடுகளின் 160 கரன்ஸி நோட்டுக்கள், 200-க்கும் அதிகமான நாணயங்கள், 400-க்கும் அதிகமான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன
    பொள்ளாச்சி:
     
    மே 22-ந்் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் வனச்சரக அலுவலர் காசிலிங்கம் ஏற்பாட்டில் நாணய கண்காட்சி நடைபெற்றது.

    நாணய சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்ந்த முரளி பங்கேற்றார். ஆஸ்திரேலியா, கென்யா, வெனிசுலா, தென்ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தும் வன உயிரினங்கள் படம் பொறித்த நோட்டுக்கள், நாணயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 

    பல்வேறு நாடுகளின் 160 கரன்ஸி நோட்டுக்கள், 200-க்கும் அதிகமான நாணயங்கள், 400-க்கும் அதிகமான தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1000-க்கும் அதிகமானோர் நாணய கண்காட்சியில் பங்கேற்றனர். கண்காட்சியை பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் கணேசன், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    கணவர் மீதும், அவரது பெற்றோர் மிதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கோவை:  

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.  இவர் இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி எனக்கும், தற்போது கோவையில் உள்ள ஒரு  போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவருக்கும் திருமணம் நடந்தது.
     
    எங்களது திருமணத்தின் போது பெற்றோர் 20 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்தனர். முதலிரவு அன்று எனது கணவர் பாலில் சில மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.  நான் மயங்கி விட்டேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

    திருமணமாகி என்னுடன் 14 நாட்கள் வாழ்ந்த எனது கணவர் அதன்பின்னர் கோவை செல்வதாகவும் விரைவில் வந்து உன்னையும் அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நானும் சரி என்று இங்கேயே தங்கி இருந்தேன்.
     
    அதன்பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.இந்த நிலையில் கடந்த 14.9.2021 அன்று என்னை தொடர்பு கொண்ட எனது கணவர் உன்னுடன் வாழ விருப்பமில்லை. இஷ்டம் இருந்தால் இரு. இல்லையென்றால் உனது வீட்டிற்கு சென்று விடு என்று கூறினார். 

    மேலும் ஏதாவது எனக்கு பிரச்சினை செய்தாய் என்றால், முதலிரவு அன்று எடுத்த  உனது ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுக்கிறார்.
     
    இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு எங்களது மகனுக்கு ஜாதகம் சரியில்லை. அதனால் உன்னை தத்து கழிக்க திருமணம் செய்தோம் என கூறுகின்றனர். எனவே என் கணவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
    ெரயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
    காரமடை,
    கோவை மாவட்டம் காரமடையில் கடந்த ஒரு வாரமாக ெரயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    அதன் ஒரு பகுதியாக ெரயில்வே தன்டவாளங்கள்  மாற்றி அமைக்க  காரமடை தோலம்பாளையம் ெரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
    பராமரிப்பு பணி நடைப்பெற்ற இந்த ெரயில்வே கேட்டினை கடந்து சென்றால் தான்  மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தேக்கம் பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.

    இதனால் இந்த தன்டவாளத்தை எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ெரயில்வே கேட்டில் தண்டாவளத்தின் அடிப்பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல வசதியாக கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்றது.
    ஆனால் அப்பணிகளை சீராக  மேற்்கொள்ள படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் காரமடை - தோலம்பாளையம் ெரயில்வே கேட்டினை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.பெண்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல சரியான முறையில் கற்களை பதிக்காததால் இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பாதையை கடக்க முயன்று விபத்தில் சிக்கினர்.

    4 சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  எனவே பராமரிப்பு பணிகளை முறையாக செய்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மொபட் மீது கார் மோதியது
    கோவை,
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவஇடத்திலேயே துடி,துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கூடுதல் டிராபிக் போலீசாரை நியமிக்க கோரிக்கை
    சிறுமுகை,
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காய்கறி மார்க்கெட், கிழங்கு மண்டி, பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.
    மேலும் பிரசித்தி பெற்ற வன பத்ர காளியம்மன் கோவில், பவானி ஆறு உள்ளிட்டவையும் உள்ளது. இதுதவிர மலைகளின் அரசியான நீலகிரிக்கு செல்லும் முக்கிய பாதையாக மேட்டுப்பாளையம் தான் உள்ளது. 
    மேட்டுப்பாளையம் வந்து தான் நீலகிரி செல்ல வேண்டும். இதனால் எப்போதுமே மேட்டுப்பாளையம் பகுதியில் வாகன போக்குவரத்து  அதிகமாகவே காணப்படுகிறது.
    பல பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வருவதால் இங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தற்போது கோடை  காலம் என்பதால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்கிறார்கள்.
    இதனால், காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகளும்.தொழிலாளர்கள் பணிக்கு வரும்போதும், வேலை முடிந்து செல்லும்போதும் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
    போக்குவரத்தை கட்டுப்படுத்த பஸ் நிலைய ரவுண்டானா, சிறுமுகை ரோடு, ஊட்டி ரோடு ஆற்றுப் பாலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    மேட்டுப்பாளையம் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பணியிடங்கள் உள்ளன. ஆனால் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் மட்டுமே தற்பொழுது பணியில் உள்ளனர். 

    போக்குவரத்து காவ லர்கள் பற்றாக்குறையால், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். 
    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் நகரில், பஸ் நிலையம். சிறுமுகை ரோடு, அன்னூர் ரோடு, அண்ணாஜீ ராவ் ரோடு ஆகிய பகுதிகள் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளாக உள்ளது. பீக் ஹவர்’ எனப்படும், காலை, மாலை நேரங்களில்,  அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் தினமும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

    மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு கனரக வாகனம் சென்றால் கூட, அதற்கு பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. தினமும் நிலவும் போக்குவரத்து நெரிசலால், பணிக்கு செல்வோர், சுற்றுலாவிற்கு செல்வோர். மருத்துவமனைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே, மாவட்ட காவல் நிர்வாகம், கூடுதல் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி, மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தனியார் நிறுவன ஊழியர் 14 பவுன் நகைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
    பொள்ளாச்சி, 
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கருப்பராயன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 61). கார் டீலர். 

    கடந்த 21-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், ஆரம், கைச்செயின், செயின் உள்பட 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 
    30-ந் தேதி இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தங்காத்தாள் என்பவர் செல்வத்தின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. 
    இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.
    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டீலர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 


    காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் வி.சி. நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சந்திர பிரபா (40). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். 
    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 14 பவுன் தங்க நகைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். 
    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பழனிசாமி  கதவு உடைக்கப்பட்டு திறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீரின் அளவை பார்த்தபோது தவறி விழுந்தார்
    கோவை,
    கோவை விளாங்குறிச்சி திரு நகரை சேர்ந்தவர் வசந்தாமணி (வயது 78). இவர் தனது மகன் ராஜேந்திரனுடன் வசித்து வந்தார்.சம்பவத்தன்று ராஜேந்திரன் விநாயகாபுரத்துக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவரது மகள் போன் செய்து பாட்டி வசந்தாமணி தண்ணீர் தொட்டில் இறந்து கிடப்பதாக கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீடு திரும்பினார். உடனே அவர் தீயணைப்பு துறைக்கும், சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.  போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வசந்தாமணியின் உடலை மீட்டனர்.பின்னர் போலீசார் வசந்தாமணியின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் வசந்தாமணி அடிக்கடி தண்ணீர் தொட்டில் நீரின் அளவை பார்ப்பது வழக்கம். அதே போன்று சம்பவத்தன்று தொட்டில் நீரின் அளவை பார்த்தபோது தவறி விழுந்து தண்ணீரில் ழுழ்கி இறந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×