என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது மனைவி ‘செக்ஸ்’ புகார்
கணவர் மீதும், அவரது பெற்றோர் மிதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி எனக்கும், தற்போது கோவையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவருக்கும் திருமணம் நடந்தது.
எங்களது திருமணத்தின் போது பெற்றோர் 20 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்தனர். முதலிரவு அன்று எனது கணவர் பாலில் சில மாத்திரைகளை கலந்து கொடுத்தார். நான் மயங்கி விட்டேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
திருமணமாகி என்னுடன் 14 நாட்கள் வாழ்ந்த எனது கணவர் அதன்பின்னர் கோவை செல்வதாகவும் விரைவில் வந்து உன்னையும் அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நானும் சரி என்று இங்கேயே தங்கி இருந்தேன்.
அதன்பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.இந்த நிலையில் கடந்த 14.9.2021 அன்று என்னை தொடர்பு கொண்ட எனது கணவர் உன்னுடன் வாழ விருப்பமில்லை. இஷ்டம் இருந்தால் இரு. இல்லையென்றால் உனது வீட்டிற்கு சென்று விடு என்று கூறினார்.
மேலும் ஏதாவது எனக்கு பிரச்சினை செய்தாய் என்றால், முதலிரவு அன்று எடுத்த உனது ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுக்கிறார்.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு எங்களது மகனுக்கு ஜாதகம் சரியில்லை. அதனால் உன்னை தத்து கழிக்க திருமணம் செய்தோம் என கூறுகின்றனர். எனவே என் கணவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story






