search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stuart Law"

    நடுவரை நோக்கி தகாத வார்த்தைகள் கூறியதால் வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது தொடக்க வீரர் பொவேல் அஸ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பந்தை தரையில் உரசியது மாதிரி தெரிந்தது. ஆனால் டிவி நடுவர் விக்கெட் கொடுத்துவிட்டார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கடும் கோபம் அடைந்தார்.

    அத்துடன் டிவி அம்பயரின் அறைக்குச் சென்று முறையற்ற வார்த்தைகளை கூறி வாக்குவாதம் செய்தார். அத்துடன் நிற்காமல் 4-வது நடுவரிடமும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஸ்டூவர்ட் லா மீது கள நடுவர்கள் ப்ரூஸ் ஆக்சன்போர்டு, இயன் குட், 3-வது நடுவர் நிகெல் லாங், 4-வது நடுவர் நித்தின் மேனன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது ஸ்டூவர்ட் லா ஐசிசியின் விதிமுறையை மீறியதாக, அவருக்கு 100 சதவீதம் அபராதத்துடன் தடைக்கான மூன்று புள்ளிகளுடன் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே 2017-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின்போது 25 சதவீதத்துடன், தடைக்கான ஒரு புள்ளியையும் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளிகள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு உள்ளதால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டூவர்ட் லா இந்தியாவிற்கு எதிராக 21 மற்றும் 24-ந்தேதி நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க இயலாது.
    இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியுள்ளார். #WestIndies #StuartLaw #India
    ராஜ்கோட்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்குகிறது. நாங்கள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறோம். இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை. அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகும்.

    இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக துபாயில் 8 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதனால் இங்கு (ராஜ்கோட்) வெயில் தாக்கம் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. இந்திய தொடர் குறித்து நிறைய பேசி விட்டோம். இனி பேசுவதை நிறுத்தி விட்டு, வீரர்கள் களத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு ஸ்டீவர்ட் லா கூறினார்.

    இதற்கிடையே தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் தொடங்கிய பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பது தெரியவந்துள்ளது.  #WestIndies #StuartLaw #India
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். #StuartLaw
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ஸ்டூவர்ட் லா. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவர் வரும் டிசம்பர் மாதத்துடன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர்கள் முடிந்த உடன் அவர் வெளியேறுகிறார். வெளியேறும் ஸ்டூவர்ட் லா கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ்க்கு பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார்.



    ஸ்டூவரட் லா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து மண்ணில் 17 வருடத்திற்குப் பிறகு ஹெட்டிங்லேயில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
    ×