search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storm drain"

    • மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார்.
    • குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.ஆர்.எப்., சாலை 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசுகையில், குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் 3000 தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாயில் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்படும் அவ்வாறு கண்டறியப்பட்டு மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது.
    • பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    கோவை:

    கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை, அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதேபோல் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உதவி கமிஷ னர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய் வாளர், தூய்மை பணியா ளர், ஒட்டுநர் ஆகியோரை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. லங்கா கார்னர் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் பட உள்ளது.

    டைடில் பார்க் முதல் தண்ணீர் பந்தல் சாலை வரை தார் சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் வரை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற பின்னர் தார் சாலை அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை பொருத்தவரை மாநகராட்சியின் பழைய 60 வார்டுகளிலும் பாதாளசாக் கடை இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் நிறைவ டைந்துள்ளது.மாநகராட்சியில் உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய 3 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல் பாட்டில் உள்ளன.

    மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. விடுபட்ட இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 32 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் தற்போது 6 மையங்கள் நல்ல நிலை யில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள மையங்களில் அவற்றின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல் பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் நமது மாநகராட்சிக்கு ரூ.70 கோடி நிதி வரப் பெற்றுள்ளது. அதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற ரூ.5 கோடி நிதியில் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளவும், பூங்காக்கள் சீரமைப்பு போன்ற பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×