என் மலர்
நீங்கள் தேடியது "status report"
மனநலம் குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன. #SupremeCourt #RehabilitationHome #MentalIllness
புதுடெல்லி:
மனநலம் பாதித்தவர்கள், குணமான பிறகும் ஆதரிப்பதற்கு யாரும் இல்லாததால், மனநல மருத்துவமனைகளிலேயே தங்க வைக்கப்படுவதாகவும், ஆகவே, அவர்களுக்காக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கவுரவ் பன்சால் என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதற்கு கடந்த ஆண்டு ஜூலை 10-ந் தேதி, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, ஓராண்டுக்குள் மறுவாழ்வு இல்லங்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன.
இதுபோல், மற்ற மாநிலங்கள் 2 வாரங்களுக்குள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். #SupremeCourt #RehabilitationHome #MentalIllness

பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kerala #SupremeCourt
திருவனந்தபுரம்:
கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Kerala #SupremeCourt