search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports match"

    • சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் 5-வது தென் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் நம்மாழ்வார், ஜூலியா கிரானெப் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே எட்டயபுரம் குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் 5-வது தென் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டியில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலசிங் தலைமை தாங்கினார்.

    சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் டிரஸ் செயலாளர் யுவராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் டிரஸ் டின் சட்ட ஆலோசகர் வக்கீல் லட்சுமண பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நம்மாழ்வார் மற்றும் தூத்துக்குடி கிங் ஆப் கிங் சி.பி.எஸ்.சி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூலியா கிரானெப் ஆகியோர் பதக்கங்களையும் சான்றிதழ்கழையும் வழங்கினர்.

    மேலும் போட்டியில் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் திருசெல்வமணி, லட்சுமண மூர்த்தி சிலம்பப் பயிற்சியாளர் நாகேஸ்வரன், கராத்தே பயிற்சியாளர் காசி மாரியப்பன், நடன ஆசிரியர் தேவா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் நாகராஜ், ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

    ட்ரஸ்ட் இன் போட்டி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முருகன் செய்திருந்தார்.

    • தென்காசி மாவட்ட முதல் தடகள போட்டியின் முதன்மை இளையோருக்கான சான்றிதழை 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி பெற்றார்
    • மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதல் தடகளப் போட்டியில் எம். கே .வி .கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்7-ம் வகுப்பு மாணவி மகதி இறகு பந்து ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் உதய சூர்யா 600மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி பந்து எறிதலில் இரண்டாம் இடத்தையும். குண்டு எறிதலில், முதல் இடத்தையும் பெற்றனர்.

    தென்காசி மாவட்ட முதல் தடகள போட்டியின் முதன்மை இளையோருக்கான சான்றிதழை 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி பெற்றார். 11-ம் வகுப்பு மாணவன் நிஷாந்த் தட்டு எறிதலில் மூன்றாம் இடத்தையும் 12-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீ ராம் உயரம் தாண்டுதல் 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேலும் இம்மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் டாக்டர் க.பாலமுருகன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் சே.ஏசுபாலன்,பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    ×