search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPMCIL"

    • தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் நிதி வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
    • ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, மேலும் ₹10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட பொதுத்துறை நிறுவனமான இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

    தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது

    10000 கோடி மதிப்பிலான தேர்தல் பாத்திரங்களை அச்சிடும் பணியை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்களை தடை செய்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு 2 வாரங்களுக்கு பின்னர், எஸ்பிஐ நிதி அமைச்சகத்திடம் அச்சிடும் பணியை நிறுத்தி வைக்குமாறு கூறிய பின்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களில் ஏற்கனவே 8,350 தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐக்கு தயாரித்து அனுப்பியுள்ளது. ஆகவே மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என அரசியல் கட்சிகளுக்குப் பத்திரங்களை வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும். ஆனால், யார் எந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவல் இதில், மறைமுகமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×