search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snatching gold"

    • 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி, சின்ன காட்டுூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவரது மனைவி அருக்காணி (75). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வெள்ளகோயில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். காட்டூர் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கி இரண்டு பேரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஆறுமுகத்தை கொண்டு சென்று விடுவதாக பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவரை அங்கே இறக்கி விட்டு விட்டு மீண்டும் அருக்காணி நடந்து வந்த இடத்திற்கு அருகே வந்துள்ளார். வந்த உடன் மின்னல் வேகத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அருக்காணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்ன காட்டூரை சேர்ந்த அருக்காணி என்பவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த பரமபட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் சந்திரசேகர் ( 37) , பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்கநகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×