என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97699"

    • விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் நிகில் முருகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளராக வலம் வரும் நிகில் முருகன் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தில் மோகன், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜீ மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் பேசிய பாக்யராஜ்

    விழாவில் பேசிய பாக்யராஜ்

     

    இவ்விழால் கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, "இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    விழாவில் பேசிய வசந்த்
    விழாவில் பேசிய வசந்த்

     

    இயக்குநர் வசந்த் பேசியதாவது, "நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.

    • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி பெற்றார்.
    • வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது.

    வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன.

    இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    வெற்றி பெற்ற பின்னர் பாக்யராஜ் கூறுகையில், வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.

    எழுத்தாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இயக்குனர் பாக்யராஜ்.
    • தற்போது சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று இயக்குனர் பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

     

    காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    பாக்யராஜ் - விஷால்

    பாக்யராஜ் - விஷால்

     

    இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • சதிஷ் ஜி குமார் இயக்கும் சூரகன் திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
    • பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் அடுத்ததாக இயக்க உள்ள படம் "சூரகன்". தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பாக வி.கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இப்படத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.ஜி.எஸ். வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    சூரகன்

    சூரகன்

    சதீஷ் ஜி குமார் ஒளிப்பதிவு இயக்கம் செய்யும் இப்படத்தில் இணைந்து ஜேசன் வில்லயம்ஸ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து இப்படத்திற்கான படப்பிடிப்பினை துவக்கி வைத்தார். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்யராஜ், தனது மகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    பாக்யராஜ்

    இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்யராஜ் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ் என்று மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

    பாக்யராஜ்
    ×