என் மலர்
நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"
- பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் பகிரப்படுகிறது. அந்த வீடியோக்களில் சில நகைச்சுவையாகவும், சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். அந்த வகையில் தான் Reddit-இல் பகிரப்பட்ட வீடியோ நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதா... இல்லையா.... என்பதை இங்கே பார்ப்போம்....
@Parking-Version9167 என்ற பயனரால் Reddit இல் பகிரப்பட்ட வீடியோ நவி மும்பையில் உள்ள சீவூட்ஸ் நெக்சஸ் மாலில் அமைந்துள்ள 7-Eleven என்ற கடையின் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சமையலறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு எலி காபி தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் இருந்தும், மற்றொரு எலி ஐஸ்கிரீம் கூம்பை மெல்லுவதையும் காட்டுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "ஐயோ! இதைப் பகிர்ந்ததற்கு நன்றி. நான் மீண்டும் அந்த விற்பனை நிலையத்திற்கு வரமாட்டேன். நீங்கள் அந்த வீடியோவை கூகுள் மேப்பிலும் பதிவேற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 7-Eleven நிறுவனம் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.
- சிறுவயது மரணங்களை தடுக்க மருத்துவர்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் உளப்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
- நடைபயிற்சி செல்லும் போது சற்று வித்தியாசமாக உற்சாக நடனத்துடன் கூடிய நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
தற்போதைய நவீன காலகட்டத்தில் சிறு வயது மரணங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள், இளம் வாலிபர்களுக்கு மாரடைப்பு அதிக அளவில் வந்து சிறு வயது மரணங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தடுக்க மருத்துவர்கள் போதிய உடற்பயிற்சி மற்றும் உளப்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் பலர் மருத்துவரின் அறிவுரையை உதாசீனப்படுத்தி பல்வேறு சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தினமும் அதே பகுதியை சேர்ந்த முதியவர்கள் மருத்துவர் மார்ட்டின் தாமஸ், தொழிலதிபர் செல்வராஜ் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஒருவர் ஆகியோர் தினமும் ஏரல் பாலத்தின் அருகே தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் இவர்கள் நடைபயிற்சி செல்லும் போது சற்று வித்தியாசமாக உற்சாக நடனத்துடன் கூடிய நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மருத்துவர் மார்ட்டின் தாமஸ் மற்றும் தொழிலதிபர் செல்வராஜ் ஆகியோர் நடனமாடியவாறு நடைபயிற்சி சென்று கொண்டிருக்கையில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர், அவர்கள் இருவரையும், செல்போனில் வீடியோ எடுத்தவாறு அவர்களுடன் உற்சாக நடனத்துடன் வாக்கிங் செல்கிறார். இவை அனைத்தையும் அங்கு சென்று கொண்டிருந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்ற ஒன்று இல்லாமல் போய்விட்ட நிலையில் இளம் மரணங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் 78 வயதை கடந்த இந்த இருவர் இந்த வயதிலும் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
- வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது.
- வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள ஷாகஞ்ச் பகுதியில் உள்ள வங்கி கிளைக்குள் காளை ஒன்று வழி தவறி சென்றுள்ளது. இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது. இதைப்பார்த்த சில வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து சத்தம் போடுகின்றனர்.
உடனே வங்கி காவலாளி கையில் கம்புடன் வந்து காளையை வங்கியில் இருந்து வெளியே விரட்டும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#SBI Bull enters SBI bank in Uttar Pradesh's Unnao, here's what happened next. Watch viral video#ShareMarket #SBIBull pic.twitter.com/0xckemJGOo
— Current Affairs Funda™ (@MCurrentAffairs) January 11, 2024
- சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும்.
- போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதேபோல் தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.
- தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என வாலிபர் புலம்பி உள்ளார்.
- விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர்.
நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.
வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுடன் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர். விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.
- சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.
- வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் சில பிரபலங்கள் புலிகள், பாம்புகள், முதலை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கூட அனுமதி பெற்று வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் வீடுகளில் ஏராளமான விலங்குகளை வளர்த்து அவற்றுடன் விளையாடுவது போன்று எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனவர் நவுமன்ஹாசன்.
இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் சிறுத்தை ஒன்று திடீரென அவரை கீறும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில் நவுமன் மற்றொரு நபருடன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறார்.
அவர்களுக்கு அருகில் நவுமன் வளர்த்து வரும் செல்ல சிறுத்தை செல்கிறது. அப்போது சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.
இந்த வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர்.
உலகின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிகச்சிறய வீட்டிற்கு ரூ.1.7 லட்சம் வாடகை என இளம்பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எமிலி பொனானி என்ற பெண் இதுதொடர்பாக டிக்-டாக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லோயர் ஈஸ்ட் சைடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு இருப்பதை காட்டுகிறார். சுமார் 2.5 அடி முதல் 3 அடி வரை மட்டுமே இருக்கும் அந்த இடத்தில் மிகச்சிறிய குளியலறை மட்டுமே உள்ளது. வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர். மேலும் வாடகை வீடு தொடர்பான சவால்களை பற்றி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டதால் எமிலியின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது.






