என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ நிறுவனம்"

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
    • அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், உலகளவில் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான 2025-ஆம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த உயரிய விருது, The Global Energy and Environment Foundation (GEEF)-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2025 (Global Sustainability Awards 2025) நிகழ்வில் வழங்கப்பட்டது. நவம்பர் 20-ந்தேதி புதுடெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைபெற்ற உலகளாவிய நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு 2025-இன் போது இந்த விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்த்து விழாவில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்களிடம் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மேம்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல அம்சங்களை இணைத்து, நிலையான போக்குவரத்து வளர்ச்சியைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அறிவியல் முறைப்படி மாற்று மரக்கன்றுகள் நடுதல், காற்று மாசு குறைப்பு அமைப்புகள், தொடர்ச்சியான சத்தம் மற்றும் அதிர்வு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

    இந்த அங்கீகாரம், சென்னை நகரத்திற்கு பசுமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்தன்மை இலக்குகளுக்கான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலைத்தன்மை விருதை (Global Sustainability Award) பெற்றுள்ளது என்பதும் சிறப்பித்துக் காட்டப்படுகிறது.

    • ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.
    • நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள் (civil works), நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் (architectural finishes), மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை (Transit Oriented Property Development - TOD) உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் திரு.T.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு.
    • டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் கடந்த 2012ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் கண்டறிந்த சில கட்டமைப்பு குறைபாடுகளை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL)நிறுவனம் சரிசெய்யவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை நிறுத்தியது.

    பின்னர், 2017ம் ஆண்டில், ஒரு நடுவர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான அந்நிறுவனத்தின் முடிவு செல்லுபடியாகும் என்று கூறி தீர்ப்பளித்தது.

    டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ்ஸுக்கு நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் (DAMEPL) நிறுவனம், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுக்கு 15 நாட்களுக்குள் சுமார் ரூ.2,599 கோடியை திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதன் அறிவிப்பின்படி, 15 நாட்களுக்குள் தொகையை டெபாசிட் செய்யத் தவறினால், டிஎம்ஆர்சி டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய நிர்பந்திக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×