என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் விபத்து"
- அருகில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் தெறித்து தீப்பொறி பரவியது.
- இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் சந்துரு (வயது27). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்களான உடுமலைப்பேட்டை அருகில் உள்ள உருதுமலைப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (57), திருப்பூர் மாவட்டம் தண்டிக்காரப் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி (66) ஆகியோர் வந்திருந்தனர்.
வீட்டு விஷேசம் தொடர்பாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சந்துருவின் செல்போன் சார்ஜ் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. அருகில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் தெறித்து தீப்பொறி பரவியது. இதனால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
- விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இளைஞர் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






