என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வுக்குழு தலைவர்"
கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், 2024ம் ஆண்டிற்கான 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக வின்சி அலோஷியஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சிறந்த குணச்சித்திர நடிகர், நடிகை, ஸ்பெஷல் ஜூரி விருது (நடிப்பு, இயக்கம்), பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திடைப்படம், சிறந்த குழந்தைகள் திரைப்படம், சிறைந் கதை எழுத்தாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, சிறந்த படக்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர்.
ஒரு தேர்வாளராக, அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது. தலைமை தேர்வாளர் ஆன பிறகு அஜித் அகர்கர் கூறுகையில், "ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.






