என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தொண்டன்"

    • முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் எனது வீட்டின் சுவற்றிலும் கட்சியினரால் எழுதப்பட்டுள்ளது.
    • அனைத்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    சேலம்:

    சேலம் ஒன்றியம் அய்யம்பெருமாம்பட்டி பழையூர் பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 65).

    இவர் நேற்று காலை முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்வில், சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கருப்பூர் அரசு விழாவிற்கு சென்ற முதலமைச்சர் காரை நிறுத்தி, கண்ணம்மா வைத்திருந்த மனுவை வாங்கினார்.

    அந்த மனுவில், 45 ஆண்டு காலமாக நான் தி.மு.க.வில் இருக்கிறேன். மேலும் தங்களை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் தங்களை சந்திப்பதுடன் அருகில் நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்பது எனது 45 ஆண்டு கால கனவாக உள்ளது என்று கூறியிருந்தார்.

    அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்பூரில் விழா முடிந்து, மீண்டும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு திரும்பியதும், மனு அளித்த கண்ணம்மாவை அழைத்து வரும்படி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.விடம் கூறினார்.

    உடனே, சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், கண்ணமாளை, முதலமைச்சரிடம் அழைத்து சென்றார். பின்னர் முதலமைச்சர் அருகில் நின்று கண்ணம்மாள் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இதில் மகிழ்ச்சி அடைந்த கண்ணம்மாள் கூறியதாவது, கடந்த 45 ஆண்டு காலமாக தி.மு.க.வில் தொண்டனாக உள்ளேன். முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று மனு கொடுத்த 6 மணி நேரத்தில் எனக்கு முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது பெருமகிழ்ச்சியை கொடுத்ததுடன் திக்கு முக்காடிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இருந்தாலும், முதலமைச்சரை சந்திக்க போகிறோமே என்று பதட்டமாக இருந்தது. மனதை தேற்றிக்கொண்ட நான், முதலமைச்சரை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

    மேலும் முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் எனது வீட்டின் சுவற்றிலும் கட்சியினரால் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது சாதனைகளை நானும் மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறேன்.

    என்றைக்கும் தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன். அனைத்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். எனது குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×