என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலங்கரை விளக்கம்"

    • கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
    • பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம் தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.

    இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்ததால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.

    இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    • சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.
    • சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைய உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

    இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `சுரங்கப் பாதை துளையிடும் எந்திரம் விரைவில் தயார் செய்யும் பணி தொடங்கப்படும். இது அடுத்த மாதத்தில் முடிவடையும். எனவே ஜூலை மாதம் முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது என்றார்.

    • மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
    • மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.

    மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    ×