என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மே தின பொதுக்கூட்டம்"

    • புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.
    • பொதுக் கூட்டங்களில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் சிறப்புரையாற்றுவார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "மே" தினத்தைக் கொண்டாடும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,

    புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.

    இந்த கூட்டங்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சி.பூங்காவனம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர அ.தி.மு.க செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமசந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, கட்சி செய்தி தொடர்பாளர் அப்சராரெட்டி , எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி சத்யா, பேச்சாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட நிர்வாகிகள் ஷாபூதீன், எஸ்.எம்.சுகுமார், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் பெல். தமிழரசன் உள்பட கட்சி பேச்சாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

    ×