என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர்கள் கைது"

    • காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
    • முதல்கட்ட விசாரணையில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தகவல் காரமடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

    அதன்படி போலீசார் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கணுவாய்பாளையம் பிரிவு, வெள்ளியங்காடு, தாயனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் போலி மருத்துவ சான்றிதழ்களுடன் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

    முதல்கட்ட விசாரணையில் அவர்களில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணை நடப்பதால் பெயர் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரிடம் சிக்கிய போலி டாக்டர்கள் ஏற்கனவே கொரோனா பேரிடர் பொதுமுடக்க நேரத்தில் மேல்பாவி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காரமடை வட்டார சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் போலி மருத்துவ கும்பல் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுபோல் டாக்டர் தொழில் செய்பவர்கள் மீது, சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது.

    மேற்கண்ட தகவல் டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அலோபதி மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் இன்றியும், எவ்வித அனுபவம் இல்லாமலும் மருத்துவம் பார்த்து கொண்டிருந்தார்.
    • விசாரணையில் போலியாக மருத்துவம் பார்த்த இரண்டு நபரையும் கைது செய்தனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் கிராமத்தில் நடராஜன் என்ற பெயரில் கிளினிக் வைத்து, மக்களுக்கு போலியாக அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகத்திற்கு வந்த புகாரின் பேரில் மருத்துவக் குழுவினரும் காவல்துறையினரும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அலோபதி மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் இன்றியும், அலோபதி மருத்துவம் பார்ப்பதற்கு எவ்வித அனுபவம் இல்லாமலும் மருத்துவம் பார்த்து கொண்டிருந்ததாக, நடராஜன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இரண்டு நபர்களை பென்னாகரம் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலியாக மருத்துவம் பார்த்த இரண்டு நபரையும் கைது செய்து நீதிமன்றத்தி ல் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×