என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்"
- பெண்கள், ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படும்
- திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்க்க ஆர்வ முள்ள விவசாயிகள் மாநில அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புழக்கடையில் அல்லது கொல்லைப்புறத்தில் அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன் றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமும், பெண்கள் மற்றும் ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொது பிரிவு பயனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை adfifvellorel@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.
- வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
192 நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்நேர்வில் விவசாயிகளின் நலன் கருதி மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களின் பேரில் உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் விவசாய காரியங்களுக்காக மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
- விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பி னை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டு மென கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 2 குளங்களும், ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள தாளவாடி வட்டாரம் - 157, கோபி வட்டாரம் - 7, பவானி வட்டாரம் - 7, பவானிசாகர் வட்டாரம் -10, டி.என்.பாளையம் வட்டாரம் -5, சத்தியமங்கலம் வட்டாரம் -3, அம்மாபேட்டை வட்டாரம் -1, சென்னிமலை வட்டாரம் -1 மற்றும் அந்தியூர் வட்டாரம் -1 என மொத்தம் 192 ஏரி மற்றும் குளங்களில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
விவசாய பயன்பாட்டி ற்காக இரண்டா ண்டுகளு க்கு ஒருமுறை நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர் மற்றும் புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்.
ஏரி மற்றும் குளங்க ளின் பெயர்கள், புலஎண், பரப்பு, வண்டல் மண் எடுக்க வேண்டிய ஆழம், தூர்வார வேண்டிய கனிம த்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிட ப்பட்டுள்ளது.
எனவே விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயடைய வேளாண்மை உதவி அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, புலவரைபடம் மற்றும் கிரைய பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலக த்தை தொடர்பு கொள்ள லாம். எனவே, விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பி னை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டு மென கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து ள்ளார்.






