என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
    • விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பி னை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டு மென கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 2 குளங்களும், ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள தாளவாடி வட்டாரம் - 157, கோபி வட்டாரம் - 7, பவானி வட்டாரம் - 7, பவானிசாகர் வட்டாரம் -10, டி.என்.பாளையம் வட்டாரம் -5, சத்தியமங்கலம் வட்டாரம் -3, அம்மாபேட்டை வட்டாரம் -1, சென்னிமலை வட்டாரம் -1 மற்றும் அந்தியூர் வட்டாரம் -1 என மொத்தம் 192 ஏரி மற்றும் குளங்களில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.

    விவசாய பயன்பாட்டி ற்காக இரண்டா ண்டுகளு க்கு ஒருமுறை நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர் மற்றும் புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்.

    ஏரி மற்றும் குளங்க ளின் பெயர்கள், புலஎண், பரப்பு, வண்டல் மண் எடுக்க வேண்டிய ஆழம், தூர்வார வேண்டிய கனிம த்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிட ப்பட்டுள்ளது.

    எனவே விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயடைய வேளாண்மை உதவி அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, புலவரைபடம் மற்றும் கிரைய பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலக த்தை தொடர்பு கொள்ள லாம். எனவே, விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பி னை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டு மென கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×