என் மலர்
நீங்கள் தேடியது "சிஆர் கேசவன்"
- பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.
கோவை:
பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களில் தவறான பயனாளர்களுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 10 கோடி பேருக்கான நிதி தடுக்கப்பட்டு, தகுதியான பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதற்கு மாறாக தி.மு.க. அரசு மலிவான மதுவை மக்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது. வளர்ந்த இந்தியா வேண்டுமென்றால் வளர்ந்த தமிழ்நாடு அவசியம். ஆனால் வளர்ந்த தமிழ்நாடு உருவாக தி.மு.க. அரசு தடையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.ஆர்.கேசவன் தமிழ்நாடு காங்கிரசின் அறக்கட்டளை டிரஸ்டியாக இருப்பவர்.
- கேசவன் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை:
மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன். சோனியா, ராகுலிடம் நெருக்கமாக இருந்த இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவு இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றியவர்.
தற்போது தமிழ்நாடு காங்கிரசின் அறக்கட்டளை டிரஸ்டியாக இருப்பவர். இந்த அறக்கட்டளையின் தலைவராக மாநில தலைவர் உறுப்பினர்களாக சி.ஆர். கேசவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று காங்கிரசில் இருந்து விலகுவதாக கேசவன் அறிவித்து உள்ளார் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் புதிய பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளார். சமீபத்தில் வெளியான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் கேசவன் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.






