என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கில் தொங்கிய வாலிபர்"

    • பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.
    • அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசியது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசியது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.இதனையடுத்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • காமாட்சி வயது (70).இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்ட நிலையில் குழந்தைகளும் இல்லை. இதனால் காமாட்சி தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் திடீரென காமாட்சி வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கருக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி வயது (70).இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்ட நிலையில் குழந்தைகளும் இல்லை. இதனால் காமாட்சி தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார்.

    வீட்டிற்குள் புகுந்த தொழிலாளி

    இந்தநிலையில் நேற்று கதவை திறந்து போட்டு விட்டு வீட்டிற்கு முன்பகுதியில் இருந்து காமாட்சி பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் திடீரென காமாட்சி வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி கதவை தட்டிய படி கத்தினார். இதனால் அந்த பகுதியினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ஆனால் நீண்ட நேராமாகியும் அவர் கதவை திறக்க வில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூரையை பிரித்து உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது அந்த நபர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கும், கிராம நிர்வாக அதிகாரி மோகனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தற்கொலை

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பிரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளது. இதனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய விலலை. மேலும் அவர் ஏன் அடுத்தவர் வீட்டிற்குள் புகுந்து தற்கொலை செய்தார் என்ற விவரமும் தெரிய வில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×