என் மலர்
நீங்கள் தேடியது "கராத்தே மாஸ்டர் கைது"
- பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 37).
இவர் கராத்தேவில் டிப்ளமோ முடித்துள்ள நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்த 2 பயிற்சி வகுப்புகளிலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல் வகாப்பின் மையத்திற்கு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் சென்று கராத்தே படித்து வருகிறார்.
இவரது தாய் தினமும் காலையில் அந்த சிறுமியை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பழகிட, செல்போன் எண்ணை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி தனிமையில் பழகி உள்ளார்.
தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சமீப காலமாக அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப், போன் செய்தபோது எதற்காக எடுக்கவில்லை என்று கூறி அவரை தாக்கியதோடு, தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
இதனால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உடனடியாக அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அப்துல் வகாப் தினமும் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கி பேச்சு கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அவரது மன்மத லீலையின் வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் இதனை வெளியே தெரிவித்தால் தங்களுக்கு அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி அந்த பெண்கள் எதையும் வெளியே சொல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கராத்தே மாஸ்டரின் இந்த மோசமான நடவடிக்கைகளை அறிந்தே அவரிடம் இருந்து விலகியதாகவும், அதனால் தான் அப்துல் வகாப் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து சுத்தமல்லி போலீசார் நேற்று இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
- புத்தாண்டு அன்று திடீரென மாணவி மாயமானார்.
- மாணவியின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
சென்னை:
திருமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். புத்தாண்டு அன்று திடீரென மாணவி மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
இதற் கிடையே மாணவி வீட்டுக்கு திரும்பி வந்ததால் மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது கராத்தே பயிற்சி அளிக்கும் மாஸ்டர் உதய கருணாநிதி என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக கடந்த ஒரு ஆண்டாக தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






