என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி அனல்மின் நிலையம்"

    • முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.
    • தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது.
    • யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    யூனிட்டுகளை இயக்குவதற்கு தேவையான நிலக்கரிகள் அங்குள்ள வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிலக்கரிகள் தண்ணீரில் நனைந்ததாக கூறப்படுகிறது. இதனால் யூனிட்டுகளை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அனல்மின் நிலையத்தின் 3,4 மற்றும் 5-வது யூனிட்டுகள் இன்று காலை நிறுத்தப்பட்டது.

    1 மற்றும் 2-வது யூனிட்டுகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனால் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது நிலக்கரியின் ஈரப்பதம் காய்ந்த பின்னர் இன்று மாலை அல்லது இரவு முதல் அனைத்து யூனிட்டுகளும் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

    ×