என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு- மின்வெட்டு ஏற்படும் அபாயம்
    X

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு- மின்வெட்டு ஏற்படும் அபாயம்

    • 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதலாவது மற்றும் 2-வது யூனிட்டுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது.

    இந்த நிலையில் 4-வது மற்றும் 5-வது யூனிட் பராமரிப்பு பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு 3-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழைக்காலம் என்பதால் குறைவான அளவில் மின்சாரம் நுகர்வு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தொடங்காவிட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×