என் மலர்
நீங்கள் தேடியது "Thoothukudi Thermal Power Plant"
- அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது.
- உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. நேற்று காலையில் 3-வது மின்உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீரென ஓட்டை விழுந்தது. இதையடுத்து அந்த மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது.
இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இரவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






