என் மலர்
நீங்கள் தேடியது "டவர் அமைக்க எதிர்ப்பு"
- சேலம் ஆட்டையாம்பட்டி 13-வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- ஊருக்கு நடுவில் டவர் அமைத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.
சேலம்:
சேலம் ஆட்டையாம்பட்டி மாரி வீதி, மூவேந்தர் வீதி மற்றும் திருமலை வீதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அந்த மனுவில், சேலம் ஆட்டையாம்பட்டி 13-வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.
இதன் மையப் பகுதியில் புதிதாக தனியார் செல்போன் டவர் அமைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஊருக்கு நடுவில் டவர் அமைத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து இருந்தனர்.
- கதிர்வீச்சால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என புகார்
- போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் கூடைவெட்டியான் வட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் 7-வது வார்டு பகுதியை சேர்ந்த தனிநபர் அவரது சொந்த நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு அனுமதி வழங்கி தனியார் நிறுவனத்தின் மூலம் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள உயிரினங்களும் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் கதிர்வீச்சால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக்க கூடாது என புகார் அளித்திருந்தனர்.
ஊராட்சி மன்ற கூட்டத்திலும் செல்போன் டவர் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் எம். சி. முனிசாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.
- பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வேலூர்:
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடப்படாமல், தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று வசந்தபுரம் ரெயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினார்.
ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.
அப்போது மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்த போலீசார் பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசினர்.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






