என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்த காட்சி.
ஏலகிரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
- கதிர்வீச்சால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என புகார்
- போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் கூடைவெட்டியான் வட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் 7-வது வார்டு பகுதியை சேர்ந்த தனிநபர் அவரது சொந்த நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு அனுமதி வழங்கி தனியார் நிறுவனத்தின் மூலம் டவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள உயிரினங்களும் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் கதிர்வீச்சால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக்க கூடாது என புகார் அளித்திருந்தனர்.
ஊராட்சி மன்ற கூட்டத்திலும் செல்போன் டவர் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் எம். சி. முனிசாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.






