என் மலர்
நீங்கள் தேடியது "சூரசம்கார விழா"
- வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கரகோசத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி குமார சாமிப்பேட்டை சிவசுப்பிர மணிய சாமி கோவிலில் 58-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று நேற்று மாலை வரை 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை சாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கரகோசத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியாக இன்று இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.
- செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்திவேலும், ஆறுமுக சாமியும் மயில் வாகன ஊர்வலம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
நாளை முதல் தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் ஆறுமுகப் பெருமான் காமதேனு வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆறுமுகப்பெருமான் ரிஷப வாகன ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து பகல் 1 மணியளவில் நவவீரர்கள் தேர்ந்தெடுத்தல் சூரன்படைக்கு வீரர்கள் சேர்த்தல் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி காலை 6 மணியளவில் மகாகந்த சஷ்டி பாராயணம் 36 முறை நடைபெற்று அன்னதானம் நடைபெறும். காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சூரசம்காரம்
மதியம் 3 மணிக்கு ஆறுமுகப்பெருமானுக்கு அம்பிகை சக்தி வேல் அருளல் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியளவில் சூரசம்காரம் நடக்கிறது.பின்னர் மாலை 6மணியளவில் சேவல் ெகாடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், புஷ்ப மாரி பொழிதல், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வெள்ளை யானையில் ஆறுமுக சாமி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.
திருக்கல்யாணம்
19-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் உலா நடக்கிறது. இரவில் வான வேடிக்கை, மேள வாத்தியம் நடக்கிறது.
தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் மதியம் 12 மணிக்கு த்வஜ அவரோஹணம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.






