என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியசாமி கோவில் சூரசம்கார விழா
    X

    கந்தசஷ்டி விழாவையொட்டி செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. (உள்படம்: வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த வள்ளி- தெய்வானை உடன் முருகன்.)

    செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியசாமி கோவில் சூரசம்கார விழா

    • செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்திவேலும், ஆறுமுக சாமியும் மயில் வாகன ஊர்வலம் நடந்தது.

    சிறப்பு அபிஷேகம்

    நாளை முதல் தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் ஆறுமுகப் பெருமான் காமதேனு வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆறுமுகப்பெருமான் ரிஷப வாகன ஊர்வலம் நடக்கிறது.

    தொடர்ந்து பகல் 1 மணியளவில் நவவீரர்கள் தேர்ந்தெடுத்தல் சூரன்படைக்கு வீரர்கள் சேர்த்தல் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி காலை 6 மணியளவில் மகாகந்த சஷ்டி பாராயணம் 36 முறை நடைபெற்று அன்னதானம் நடைபெறும். காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.

    சூரசம்காரம்

    மதியம் 3 மணிக்கு ஆறுமுகப்பெருமானுக்கு அம்பிகை சக்தி வேல் அருளல் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியளவில் சூரசம்காரம் நடக்கிறது.பின்னர் மாலை 6மணியளவில் சேவல் ெகாடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், புஷ்ப மாரி பொழிதல், தீபாராதனை நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வெள்ளை யானையில் ஆறுமுக சாமி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.

    திருக்கல்யாணம்

    19-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் உலா நடக்கிறது. இரவில் வான வேடிக்கை, மேள வாத்தியம் நடக்கிறது.

    தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் மதியம் 12 மணிக்கு த்வஜ அவரோஹணம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.

    Next Story
    ×