என் மலர்
நீங்கள் தேடியது "அலெக்சாண்டர்"
- அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
- அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளார்.
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான அலெக்சாண்டர் பாபு சில வருடங்களுக்கு முன்பு நடத்திய அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது அலெக்சாண்டர் பாபு 'alexperience' என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி அன்பா டிவி என்ற OTT-இல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அலெக்சாண்டர் பாபு, பிரதமர் மோடியை போலவே மிமிக்ரி செய்து கிண்டல் செய்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
alexperience நிகழ்ச்சியில் பேசிய அலெக்சாண்டர் பாபு, "அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக perform செய்வது நம்ம ஜி தான். அவரை அடிச்சிக்கவே முடியாது. அதிலும் இசையில் அவர் ரொம்ப strong. அவர் ஒன்றும் பாடகர் கிடையாது. ஆனால் தற்போதைய தொழில் நுட்பத்தால் அனைவரும் பாட்டு பாடுகிறார்கள். அவர் பாடகர் இல்லை என்றாலும், ஒரு ராகம் வைத்துள்ளார். மித்ரோன்....இப்படி தான் நம்ம கத்துறோம்... அந்த ராகத்தில் எது வேண்டுமானலும் அழகாக உட்கார்ந்து விடுகிறது. மித்ரோன்... இப்படி சொல்லி தான் எல்லாத்தையும் வித்துருவோம்...
நாடகத்திலும் அவர் கைதேர்ந்தவர். அவர் பேசுவதை டிவியில் பார்த்தல் சப்டைட்டில் இல்லாமல் கூட தெளிவாக புரியும். உங்களுக்கு ஒருவார்த்தை இந்தி தெரியவில்லை என்றாலும் கூட, அவரது உடல்மொழியை எல்லாத்தையும் சொல்லிவிடும்.
மித்ரோன்... ஊரெல்லாம் சுத்துறோம்... யாரும் எதுனா சொன்னா என்போர்ஸ்மென்ட் அனுப்பி எல்லார் வாயையும் பொத்துறோம்..." என்று கிண்டலாக தெரிவித்தார்.
மேலும் டெலிபிராம்ப்டர் வைத்து மோடி பேசுவதையும், தமிழ்நாட்டிற்கு வந்தால் அவர் தமிழில் பேசுவதை போலவும் அலெக்சாண்டர் பாபு பேசி அசத்தினார்.
- விவசாய அமைப்புகள் மரியாதை
- திருவட்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் பங்கேற்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் 1895 ஆண்டு தொடங்கி 1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பிரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார். இவரது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைத்தது. பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் பிறந்தார்.
1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்மதிப்பால் மன்னர் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவிலிருந்து ஊர்வலமாக எடுத்து வர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இதேபோன்று 154-வது பிறந்த தினமான நேற்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக சென்று மலரஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர். விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், மாவட்ட உற்பத்தி குழு உறுப்பினர் ஹென்றி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், துணை தலைவர் பீனாகுமாரி திருவட்டார் ஒன்றிய தி.மு.க. தொண்டரணி முன்னாள் அமைப்பாளர் ஜெறோம், விவசாய சங்க பிரதிநிதிகள் முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






