என் மலர்
நீங்கள் தேடியது "சரோஜ் நாராயண்சுவாமி"
- அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி காலமானார் என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறது.
- வானொலியில் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர் தனது கம்பீரமான குரலால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.
சென்னை:
தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி காலமானார் என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறது.
வானொலியில் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர் தனது கம்பீரமான குரலால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். ஆவணப் படங்கள் இயக்குவது, மொழிபெயர்ப்பு செய்வது உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்தார்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமி குரல்.
- மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.
சென்னை:
செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் சுவாமி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமி குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






