என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரோஜ் நாராயண்சுவாமி மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
    X

    சரோஜ் நாராயண்சுவாமி மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    • அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமி குரல்.
    • மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன்.

    சென்னை:

    செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் சுவாமி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயண்சுவாமி குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×