என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.5 லட்சம் மோசடி"

    • பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர் குறிப்பிட்டு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைனில் அழகு சாதன பொருட்களை கடந்த 5 ஆண்டுகளாக வாங்கி வந்தார்.
    • பரிசு பெற தேர்வாக இருப்பதாக வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் மோகன முகில் (வயது 25). பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர் குறிப்பிட்டு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைனில் அழகு சாதன பொருட்களை கடந்த 5 ஆண்டுகளாக வாங்கி வந்தார்.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளாக பொருட்கள் வாங்கி வருவதால் பரிசு பெற தேர்வாக இருப்பதாக வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் 5 பரிசு பொருட்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .

    அதற்கு மோகனா முகில் டி.வி.யை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து பேசிய மர்ம நபர் உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு ஒரு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என கூறியுள்ளார் .

    இதனை நம்பிய மோகன முகில் அந்த நம்பரை சொன்ன சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர் ரூ. 4 லட்சத்து 89 ஆயிரத்தை அபேஸ் செய்துவிட்டார்.

    இந்த ஆன்லைன் மோசடி குறித்து நாமக்கல் சைபர் கிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    • கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(வயது30), தனியார் நிறுவன ஊழியர். ரேஸ்கோர்சில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த ஆண்டு பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில், கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கோவை அவிநாசி ரோட்டில் லட்சுமி மில் சிக்னலில் உள்ள தங்களது கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனர்.

    இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டை காட்டினர். அதனை வாங்க விருப்பம் தெரிவித்து முன்பணமாக கடந்த மார்ச் மாதம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தேன். அப்போது நிறுவனத்தினர் 3 மாதங்களில் பத்திரப்பதிவு செய்து வீட்டை விற்பதாக ஒப்பந்தம் போட்டு கொடுத்தனர்.

    ஆனால், அவர்கள் சொன்னபடி வீட்டை கொடுக்க வில்லை. இது குறித்து மீண்டும் தொடர்பு கொண்டு கேட்ட போது, மழுப்பலாக பதில்அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த நான் விசாரித்த போது, வேறொருவர் பெயரில் உள்ள வீட்டை காட்டி விற்பதாக ஏமாற்றியது தெரியவந்தது.

    நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது, அவர்கள் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர். அதனை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.

    மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த நாகேந்திரன்(49), காந்திபுரம் 3 வது வீதியை சேர்ந்த தர்மேந்திரகுமார்(48) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் நிறுவனத்தின் மேலாளர், அன்பு சந்திரன், மற்ற பங்குதாரர்கள் சரவணகுமார், பிரேம நந்தினி, சைனி தாமஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×