என் மலர்
நீங்கள் தேடியது "Rs 5 lakh fraud"
- கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
- மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர்.
கோவை:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(வயது30), தனியார் நிறுவன ஊழியர். ரேஸ்கோர்சில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த ஆண்டு பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில், கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கோவை அவிநாசி ரோட்டில் லட்சுமி மில் சிக்னலில் உள்ள தங்களது கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனர்.
இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டை காட்டினர். அதனை வாங்க விருப்பம் தெரிவித்து முன்பணமாக கடந்த மார்ச் மாதம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தேன். அப்போது நிறுவனத்தினர் 3 மாதங்களில் பத்திரப்பதிவு செய்து வீட்டை விற்பதாக ஒப்பந்தம் போட்டு கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் சொன்னபடி வீட்டை கொடுக்க வில்லை. இது குறித்து மீண்டும் தொடர்பு கொண்டு கேட்ட போது, மழுப்பலாக பதில்அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நான் விசாரித்த போது, வேறொருவர் பெயரில் உள்ள வீட்டை காட்டி விற்பதாக ஏமாற்றியது தெரியவந்தது.
நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது, அவர்கள் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர். அதனை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.
மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த நாகேந்திரன்(49), காந்திபுரம் 3 வது வீதியை சேர்ந்த தர்மேந்திரகுமார்(48) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் நிறுவனத்தின் மேலாளர், அன்பு சந்திரன், மற்ற பங்குதாரர்கள் சரவணகுமார், பிரேம நந்தினி, சைனி தாமஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது.
- பாலு அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்து தங்க நகைகள் என நினைத்து தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார்.
கோவை
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு ( வயது 45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 15-ந் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளர் பாலுவிடம் தங்களை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து வந்துள்ளதாக அறிமுகப்படுத்தினர்.
அப்போது ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது. ஒரு குடுவையில் தங்க நகைகள் இருந்தன. அதனை குறைந்த விலையில் விற்க உள்ளோம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒரு தங்க கட்டி துண்டை கொடுத்தனர். அதனை வாங்கிய ஓட்டல் உரிமையாளர் பாலு பரிசோத்த போது அது சுத்தமான தங்கம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட ஓட்டல் உரிமையாளர் பாலு உங்களிடம் எவ்வளவு தங்க நகை உள்ளது என கேட்டார். அதற்கு அவர்கள் மொத்தம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான 1¾ கிலோக தங்க நகைகள் இருப்பதாகவும், இதனை ரூ.5 லட்சத்துக்கு தருவதாகவும் கூறினர்.
மேலும் கோவை காந்திபுரத்துக்கு பணத்துடன் வந்தால் நகைகளை தருவதாக கூறினர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பினார். பின்னர் தனது நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் பணத்தை திரட்டினார்.
பின்னர் கடந்த மாதம் 20-ந் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை வந்தார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க நகைகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அங்கு சென்ற பாலு அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்து தங்க நகைகள் என நினைத்து தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார்.
பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






