என் மலர்
நீங்கள் தேடியது "5 lakh fraud"
- பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர் குறிப்பிட்டு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைனில் அழகு சாதன பொருட்களை கடந்த 5 ஆண்டுகளாக வாங்கி வந்தார்.
- பரிசு பெற தேர்வாக இருப்பதாக வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் மோகன முகில் (வயது 25). பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர் குறிப்பிட்டு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆன்லைனில் அழகு சாதன பொருட்களை கடந்த 5 ஆண்டுகளாக வாங்கி வந்தார்.
இந்த நிலையில் 5 ஆண்டுகளாக பொருட்கள் வாங்கி வருவதால் பரிசு பெற தேர்வாக இருப்பதாக வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் 5 பரிசு பொருட்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .
அதற்கு மோகனா முகில் டி.வி.யை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து பேசிய மர்ம நபர் உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு ஒரு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என கூறியுள்ளார் .
இதனை நம்பிய மோகன முகில் அந்த நம்பரை சொன்ன சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர் ரூ. 4 லட்சத்து 89 ஆயிரத்தை அபேஸ் செய்துவிட்டார்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்து நாமக்கல் சைபர் கிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.






