என் மலர்
நீங்கள் தேடியது "பருத்தி வரத்து அதிகரிப்பு"
- ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
- பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 2,033 மூட்டையில் 66 டன் பருத்தி ஏலத்துக்கு எடுத்து வரப்பட்டது.ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு 7,000 முதல் 8,799 ரூபாய் வரையும், கொட்டு ரகம் 2,000 முதல் 1,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. வரத்து அதிகரித்தும் விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மொத்தம் 12 வியாபாரிகள் 403 விவசாயிகள் பங்கேற்றனர். ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.






