என் மலர்
நீங்கள் தேடியது "நீட் தேர்வு மையம்"
- நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
- சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட 31 மாவட்டங்களில் சுமார் ஒன்றை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகி்னறனர்.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் அனுமதித்தனர்.
இந்த நிலையில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவிகள் சிலர் நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறில் இருந்து 1.40 மணிக்கு வந்த நிலையில் மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேரம் கடந்த காரணத்தால் தேர்வு எழுதாமல் மாணவி ப்ரீத்தி திருப்பிச் சென்றார்.
இதேபோல், சென்னை திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத 15 நிமிடம் தாமதமாக வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால், கதறி அழுத மாணவியை சமாதானம் செய்து சக மாணவர்களின் பெற்றோர் ஆறுதல் செய்தனர்.
- தேர்வு மையத்திற்கு உள்ளே காலை 11.40 மணிக்குள் இருந்து 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- காலை 9 மணிக்கு தருமபுரி எஸ்வி ரோடு பகுதியில் உள்ள இரண்டு தேர்வு மையத்தில் மாணவ, மாணவியர் குவிந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரிமாவட்டத்தில் 5437 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வினை என்டிஏ நடத்துகிறது.தருமபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி 360 பேரும், அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 1213 பேரும், தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளி 1080 பேரும், விஜய் வித்யாஷ்ரம் பள்ளி 1152 பேரும், செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 504 பேரும், சோகத்தூர் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி 456 பேரும், கமலம் இண்டர்நேஷனல் பள்ளி 480 பேரும், நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி 192 பேரும் ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 5437 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையத்திற்கு உள்ளே காலை 11.40 மணிக்குள் இருந்து 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு தருமபுரி எஸ்வி ரோடு பகுதியில் உள்ள இரண்டு தேர்வு மையத்தில் மாணவ, மாணவியர் குவிந்துள்ளனர்.
- தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் எழுதினார்.
- விஜய் வித்யாஷ்ரம், உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
தருமபுரி,
தருமபுரி எம்.பி, மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் கடந்த மே மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாலவியாவிற்கு நீட் தோ்வு மையம் அமைக்க கடிதம் எழுதினார்.
கடிதத்தில் தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களிலும் மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்படுவதால் அவர்கள் 900 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து தேர்வு எழுதும் நிலை உள்ளது.
எனவே தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் எழுதினார்.
கடந்த செவ்வாய்க்கி ழமை நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கேந்தர்ய வித்யாலயா பள்ளி, செந்தில் பப்ளிக் ஸ்கூல், விஜய் மில்லினியம் ஸ்கூல், விஜய் வித்யாஷ்ரம், உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் கோவை, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேர்வு எழுதிய நிலை மாறி இந்த ஆண்டு தருமபுரியிலேயே தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது.
தருமபுரியில் தேர்வு மையத்தைப் பெற்றுத் தந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமாருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.






