search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு எழுத தருமபுரியில் காலை 9 மணிக்கே தேர்வு மையம் முன்பு குவிந்தனர்
    X

    நீட் தேர்வு எழுத தருமபுரியில் காலை 9 மணிக்கே தேர்வு மையம் முன்பு குவிந்தனர்

    • தேர்வு மையத்திற்கு உள்ளே காலை 11.40 மணிக்குள் இருந்து 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • காலை 9 மணிக்கு தருமபுரி எஸ்வி ரோடு பகுதியில் உள்ள இரண்டு தேர்வு மையத்தில் மாணவ, மாணவியர் குவிந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரிமாவட்டத்தில் 5437 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வினை என்டிஏ நடத்துகிறது.தருமபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி 360 பேரும், அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 1213 பேரும், தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளி 1080 பேரும், விஜய் வித்யாஷ்ரம் பள்ளி 1152 பேரும், செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 504 பேரும், சோகத்தூர் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி 456 பேரும், கமலம் இண்டர்நேஷனல் பள்ளி 480 பேரும், நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி 192 பேரும் ஆகிய 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 5437 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையத்திற்கு உள்ளே காலை 11.40 மணிக்குள் இருந்து 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலை 9 மணிக்கு தருமபுரி எஸ்வி ரோடு பகுதியில் உள்ள இரண்டு தேர்வு மையத்தில் மாணவ, மாணவியர் குவிந்துள்ளனர்.

    Next Story
    ×