search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் முதல் முறையாக 8 இடங்களில் நீட் தேர்வு மையம்
    X

    தருமபுரியில் முதல் முறையாக 8 இடங்களில் நீட் தேர்வு மையம்

    • தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் எழுதினார்.
    • விஜய் வித்யாஷ்ரம், உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி எம்.பி, மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் கடந்த மே மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாலவியாவிற்கு நீட் தோ்வு மையம் அமைக்க கடிதம் எழுதினார்.

    கடிதத்தில் தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களிலும் மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்படுவதால் அவர்கள் 900 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து தேர்வு எழுதும் நிலை உள்ளது.

    எனவே தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை கடிதம் எழுதினார்.

    கடந்த செவ்வாய்க்கி ழமை நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கேந்தர்ய வித்யாலயா பள்ளி, செந்தில் பப்ளிக் ஸ்கூல், விஜய் மில்லினியம் ஸ்கூல், விஜய் வித்யாஷ்ரம், உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    இதுவரை தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் கோவை, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேர்வு எழுதிய நிலை மாறி இந்த ஆண்டு தருமபுரியிலேயே தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது.

    தருமபுரியில் தேர்வு மையத்தைப் பெற்றுத் தந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமாருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×