என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரபாணி கோவில்"

    • சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
    • திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் பெருமாள்-தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.

    மேலும், வீதிகள் தோறும் திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேரானது 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • கும்பகோணத்தில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சக்கரபாணி கோவில் உள்ளது.
    • பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணத்தில் சக்கரபாணி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி இரவு கோவில் பிரகாரத்தில் உள்ள அமிர்தபுஷ்கரணியில் விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயாரோடு சக்கரபாணி மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து தெப்பம் திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×