என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சூபுரம்"

    காஞ்சீபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு பொது மருத்துவமனை, பழைய ரெயில் நிலையம், மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

    மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன.

    நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இந்த சாலையில், ராஜாஜி மார்கெட் அருகே அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

    மாலை நேரங்களில் மதுக்கடைக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக அடிக்கடி 108 ஆம்புலன்சுகள் சென்று வரும்போது வாகனங்களால் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

    எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள இந்த டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது. ‘‘முக்கிய சாலையால் உள்ள டாஸ்மாக் கடையில் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிமகன்கள் தினமும் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்’ என்றனர். #tamilnews
    ×