என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் டாஸ்மாக் கடை"
- பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நொய்யல் புது சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு தங்களுக்கு இந்த கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சிலர் கடையை வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொது மக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். புதிதாக வரும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் உழவர் சந்தை ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடமாக இருப்பதால் இந்த கடைக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த கடையை மூடகோரி கடந்த வாரம் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை மூடக்கூடாது என குடிமகன்கள் பதிலுக்கு போராட்டம் நடத்தினார்கள். தகவல் கிடைத்ததும் தாசில்தார் அங்கு விரைந்து வந்தார்.
அவர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.
ஆனாலும் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100 பேர் கடையை திறக்க விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. டாஸ்மாக் கடை மூடப்படும் என கலெக்டர் அறிக்கை வெளியிட்டால் மட்டுமே கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். #tamilnews






