என் மலர்
நீங்கள் தேடியது "Womens darna struggle"
திருப்பூர் புதிய பஸ் நிலையம் உழவர் சந்தை ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க விடாமல் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையம் உழவர் சந்தை ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடமாக இருப்பதால் இந்த கடைக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த கடையை மூடகோரி கடந்த வாரம் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை மூடக்கூடாது என குடிமகன்கள் பதிலுக்கு போராட்டம் நடத்தினார்கள். தகவல் கிடைத்ததும் தாசில்தார் அங்கு விரைந்து வந்தார்.
அவர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.
ஆனாலும் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100 பேர் கடையை திறக்க விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. டாஸ்மாக் கடை மூடப்படும் என கலெக்டர் அறிக்கை வெளியிட்டால் மட்டுமே கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். #tamilnews