என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீரங்கி தாக்குதல்"

    • ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
    • 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.

    வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.823 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.

    ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறியதாவது:-

    ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த ஆயுத விற்பனை இந்தோ- பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்க ளில் அரசியல் ஸ்திரத் தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத் திற்கு ஒரு முக்கிய சக்தியாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியா பாதுகாப்பை மேம்படுத்தும்.

    இந்த விற்பனை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும். அதன் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் களைத் தடுக்கும். இந்த ஆயுதங்களை இந்தியா தனது ஆயுதப் படைகளில் இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

    எப்.ஜி.எம். 148 ஜாவெலின் ஏவுகணைகள், டாங்கி போன்ற இலக்குகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். #Afhan #Civilan #AirStrike
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம், தகாப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

    அப்போது அல்மாஸ்கேல் என்ற கிராமத்தில் ஒரு பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி தகாப் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி முகமது நயீம் சபி கூறும்போது, “இந்த மாவட்டத்தில் பல இடங்களிலும் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அல்மாஸ்கேல் கிராமத்தில் பத்ராப் பகுதியில் ஒரு பீரங்கி குண்டு விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என அவர் குறிப்பிடவில்லை.

    அந்தப் பகுதியில் வசித்து வருகிற ஹாஜி கலீல் என்பவர் கூறும்போது, “வீடுகள் மீது பீரங்கி குண்டுகள் விழுகின்றன. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

    இதற்கிடையே தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அல்மாஸ்கேல் கிராமத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி விட்டனர் என கூறி உள்ளார்.  #Afhan #Civilan #AirStrike 
    ×