என் மலர்tooltip icon

    உலகம்

    டாங்கி எதிர்ப்பு ஏவுகணை-பீரங்கி குண்டுகள்: இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை- அமெரிக்கா அறிவிப்பு
    X

    டாங்கி எதிர்ப்பு ஏவுகணை-பீரங்கி குண்டுகள்: இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை- அமெரிக்கா அறிவிப்பு

    • ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
    • 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.

    வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.823 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.

    ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறியதாவது:-

    ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த ஆயுத விற்பனை இந்தோ- பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்க ளில் அரசியல் ஸ்திரத் தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத் திற்கு ஒரு முக்கிய சக்தியாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியா பாதுகாப்பை மேம்படுத்தும்.

    இந்த விற்பனை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும். அதன் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் களைத் தடுக்கும். இந்த ஆயுதங்களை இந்தியா தனது ஆயுதப் படைகளில் இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

    எப்.ஜி.எம். 148 ஜாவெலின் ஏவுகணைகள், டாங்கி போன்ற இலக்குகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×