என் மலர்
நீங்கள் தேடியது "கோடீஸ்வரர்கள் பட்டியல்"
- சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார்.
- 2018-ம் ஆண்டில் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார்.
2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் (Harun India) கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். ரூ. 8.15 லட்சம் கோடியுடன் தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பரும் இடம்பிடித்துள்ளார். ரூ.21,190 கோடி சொத்துடன் இவர் இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். 'பெர்ப்ளெக்ஸிட்டி' ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்து வரும் இவர், இந்தியாவின் முன்னணி இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். ஸ்ரீனிவாஸ், தற்போது தொழில்நுட்ப உலகில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.
Harun India பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தியாவில் இப்போது 358 பில்லியனர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரது தொழில்முறை பயணத்தில் முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றியதும் அடங்கும். 2018-ம் ஆண்டில், அவர் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து டீப் மைண்ட் (DeepMind) மற்றும் கூகுளில் பயிற்சி பெற்றார்.
ஸ்ரீனிவாஸ் 2021 செப்டம்பரில் Open AI விஞ்ஞானியாக திரும்பினார். சுமார் ஒரு வருடம் கழித்து, அவர் தனது சொந்த முயற்சிக்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார். இது இறுதியில் பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவ வழிவகுத்தது.
- 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
- கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச நிறுவனம் 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் தரவரிசை நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் 835 பேரை அதிக கோடீஸ்வரர்களாக அமெரிக்கா கொண்டுள்ளது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 32 கோடீஸ்வரர்களின் சேர்க்கையைக் கண்டது, இது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் கூட்டுச்சொத்து இந்த ஆண்டில் 42.1 சதவீதம் அதிகரித்து 905.6 பில்லியன் டாலராக (76.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
- கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார்.
- செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் ஆகியவை 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இளம் தொழில் முனைவோர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர்.
கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார்.
செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கைவல்யா வோரா, ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார். புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் இந்தியா திரும்பினர்.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டோ நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் கொரோனா சமயத்தில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட இருவரும் செப்டோ நிறுவனத்தின் மூலமாக மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்ய நினைத்து செய்த நடவடிக்கைகள் நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.
கைவல்யா வோராவின் பங்குதாரர் ஆதித் பலிச்சாவுக்கு தற்போது 20 வயதாகிறது. இவரது சொத்து மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும். பலிச்சா, தன்னுடைய 17 வயது முதல் ஸ்டார்ட் அப் கனவில் இருந்ததாக பல முறை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்நிறுவனம் 2 வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பது ஸ்டார்ட் அப் உலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.







