என் மலர்
நீங்கள் தேடியது "திருமங்கலம் கொள்ளை"
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 48) இவர் கள்ளிக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி திலகவதி மாசவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அழகர் சாமி தன் மனைவியை வழக்கம்போல் பள்ளியில் இறக்கி விட்டு காலையில் வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்த அழகர்சாமி வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து அறைகளிலும் உள்ள கதவுகளை உடைத்து எலக்ட்ரிக்கல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரையூர்:
திருமங்கலம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங் கடேஸ்வரன் (வயது 40). தே.மு.தி.க.வைச் சேர்ந்த இவர் முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் ஆவார். திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டில் வெங்க டேஸ்வரன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று வியாபாரம் முடிந் ததும் கடையை பூட்டிச் சென்று விட்டார். இன்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வெங்க டேஸ்வரன் அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கண்ணாடி கதவும் திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த ரூ.47 ஆயிரம் கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங் கள் சேகரிக்கப்பட் டன. துப்பறியும் நாயும் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
நகரின் முக்கிய பகுதியில் உள்ள கடையை உடைத்து கொள்ளை சம்பவம் நடந் திருப்பது அந்தப்பகுதி மக்க ளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.






