என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவலிங்கம் மீது தேள்"

    மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர் என மோடியை விமர்சித்த முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பாஜக தலைவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். #ShashiTharoor #Congress #BJP #PMModi
    புதுடெல்லி:

    பெங்களூரு நகரில் சமீபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.

    ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் குறிப்பிடுகையில், ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது’ என உதாரணம் கூறியதாக சசி தரூர் பேசினார்.



    அவரது இந்த சர்ச்சைப் பேச்சை சில ஊடகங்கள் வீடியோ வடிவில் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததுடன் சிவபக்தரான தனது மத உணர்வையும், கோடிக்கணக்கான சிவனடியார்களின் பக்தியையும் இழிவுப்படுத்தி விட்டதாக  முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பபர் டெல்லி கோர்ட்டில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். #ShashiTharoor #Congress #BJP #PMModi

    ×