என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டான் பிரதமர்"

    • அயோத்தி விமான நிலையம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
    • ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.

    லக்னோ:

    பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

    இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

    விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் லோதே ஷெரிங், இன்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #BhutanPM #PMModi
    புதுடெல்லி:

    பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.



    அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, பூட்டான் பிரதமர் சந்தித்தார். அப்போது, அவருக்கு சுஷ்மா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். #BhutanPM #PMModi
    ×